Text Widget

Sunday, January 31, 2010

தினேசுவரி கவிதைகள்

Posted on 9:01 AM by கே.பாலமுருகன்

உடல் மறந்த உயிர்கள்

பறவைப் போல்
பறக்க நினைத்து
மின்சார மரத்தில்
மாட்டிக் கொண்ட
பட்டம் நான்......

காகிதம் நான்
என அறிந்து
போகி மரப் புத்தர்
போல் காற்றோடு
அமைதி காத்தேன்...

பறவை மிஞ்சும்
சூறாவளி
நான் என
கதை பரப்பி விட்டார்கள்...

தலைக்கனம்
தலையில்
அமர்ந்ததும்
அமர்க்களப்பட்டேன்...

தலைக் கால்
புரியாமல்
முட்டி மோதினேன்...

காற்றோடு
போராட்டத்தில்
கழிக்கப்பட்டேன்...

காப்பாற்றுவதாகச்
சொல்லி
பலர் பிடித்து
இழுத்ததில்
வாலறுந்து
போனது...

மீதி கிடந்த
உடலில் அழுகிய
பிண வாடை...

உசுப்பி விட்டவன்
இன்னொரு
பட்டத்தோடு.......


கண்ணீரும் கற்களும்.....

இதோ
நான்
மூழ்கிக்
கொண்டிருக்கிறேன்...
மூச்சடைத்து
காதடைத்து
நெஞ்சடைத்தும்
போகிறது....

வாழ்ந்து வந்த
மண் நாசிவரை
மணக்கிறது...
இருந்தும்
கதற முடியாத
அவலனிலையில்....

இது கொலையல்ல....
தற்கொலையல்ல...
இயற்கை மரணமுமல்ல..
மரண தண்டனையுமல்ல....

மனிதர்களின்
இயலாமை....

எத்தனை முறை
நீர் நிலைகளின்
மடியில் மரண சாசனம்....

இன்று

நான்
உங்கள் இயலாமைக்குப்
பலியாகும்
கல்.....
வீசி எறியப்பட்டு
இதோ
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.....

* * * * *

1 Response to "தினேசுவரி கவிதைகள்"

.
gravatar
Unknown Says....

தினேசுவரியின் இவ்விருக்கவிதைகளும் என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றன...
வாழ்க...

Leave A Reply