Text Widget

Tuesday, February 2, 2010

சிறுகதை: ஏந்தல்- மஹாத்மன் http://anangam.blogspot.com/2010/02/blog-post_02.html நேற்று பாடம் நடந்து கொண்டிருந்த போது குண்டன் முன்னிருக்கையிலிருந்து ஒருமுறை திரும்பி என்னைப் பார்த்தான். சின்னக் கண்களில் வலுவில் வரவழைத்துக் கொண்ட கோபம் கூர்மையாகத் தெரித்தது. இரண்டாவது முறை பார்த்த போது முணுமுணுப்பாய் என்னைக் சிறுகதை: யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து...

யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

23 மார்ச் 1993 - செவ்வாய் ஏற்கனவே நடத்தி முடித்திருந்த வரலாற்றுப் பாடத்தைத் திருப்பிப்பார்க்கும் நோக்கில் நேற்றைக்கு திருமதி.மல்லிகா ஆரம்பித்த போதே வழக்கமான அந்த அசௌகரிய உணர்வு எனக்குள் வியாப்பித்தது. தொடக்க நிலை நான்காம் வகுப்பு தொடங்கிய பிறகு இந்த மூன்று மாதங்களில் சிங்கப்பூரில் ஜப்பானியராட்சி குறித்து ஆசிரியர் முன்பும் ஒரு முறை விரிவாகப்பேசியிருக்கிறார். கூடுதல் தகவல்களாக ஜப்பானிய இராணுவ...

சிறுகதை: ஏந்தல்

இன்னும் விடியாத பொழுது. மஞ்சளொலி வீச்சுள்ள சுரங்கப் பாதையில் இறங்கி நடக்கும்போது, மலாய் ஆடவர்கள் பலவிதமான குல்லாக்களிலும் தங்களுக்கேயுரிய இஸ்லாமிய கலாச்சார புத்தாடைகளோடும் சுகந்த வாசத்தோடும் மலர்ந்த முகத்தோடும் சென்றதைக் கண்டேன். மஸ்ஜிட் நெகாராவின் முதன்மையான இரும்பு பெருங்கதவு திறக்கப்பட்டிருந்தது. நுழைகையில் வலது பக்கமாய் பாதிவரை எழுப்பப்பட்ட குறுகியச்சுவர் இருந்தது. சுவரோரத்தில் உட்கார்ந்து...

Sunday, January 31, 2010

அநங்கம்: புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம் என்பது?-கே.பாலமுருகன்

அநங்கம் ஆறாவது இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வர வேண்டிய முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். மேலும் அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழை இணைய மாத இதழாகக் கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சியிலும் ஈடுப்பட்டிருந்ததால் காலம் வரையறையின்றி என்னிடமிருந்து இடறியிருந்தன. இந்தத் தடவை அநங்கம் சிறுகதை இதழுக்காக மொத்தம் 15 கதைகள் சீக்கிரமாகவும், மிகவும் தாமதமாகவும் வந்து சேர்ந்திருப்பது...

துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் - இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக்கூடாது. அப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் அதற்கானத் தீர்வு எந்தக் காலத்திலும் கிடைத்துவிடாது என்பார்கள். மதம் எனும் போர்வையால்...

என்னோடு உறங்கும் பூனை-இளைய அப்துல்லாஹ்

பாய்ந்து வந்து என்னோடுதான் அது உறங்குகிறது. எனது படுக்ககையில் எனது அருகாமையில் என்னை விட்டு அகலமாட்டேன் என்கிறது பூனையின் முடிகள் சுகமானது அதன் கழுத்தில் ஒரு தாலி கட்டி அழகு பார்த்தேன் பூனையின் தாலி என்னை குத்துகிறது விலக மறுத்த பூனை பல வருடங்களாக என்னோடேயே இருக்கிறது எனக்கு வலிக்கிறது என்பது பூனைக்கு தெரிகிறதாயினும் என்னோடுதான் உறங்குகிறது தினம் அடம் பிடித்து அப்புறபப்படுத்த முடியாமைக்கு...

தினேசுவரி கவிதைகள்

உடல் மறந்த உயிர்கள் பறவைப் போல் பறக்க நினைத்து மின்சார மரத்தில் மாட்டிக் கொண்ட பட்டம் நான்...... காகிதம் நான் என அறிந்து போகி மரப் புத்தர் போல் காற்றோடு அமைதி காத்தேன்... பறவை மிஞ்சும் சூறாவளி நான் என கதை பரப்பி விட்டார்கள்... தலைக்கனம் தலையில் அமர்ந்ததும் அமர்க்களப்பட்டேன்... தலைக் கால் புரியாமல் முட்டி மோதினேன்... காற்றோடு போராட்டத்தில் கழிக்கப்பட்டேன்... காப்பாற்றுவதாகச் சொல்லி பலர்...

பா.சிவம் கவிதை : ஈழம்

இழந்தவற்றைப் பட்டியலிடும்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன மேலும் சில இழப்புகள்… ஒரு மனைவியை கணவன் முன் சீரழிக்க… ஒரு தங்கையை அண்ணன் முன் தோலுரிக்க அவர்களால்தான் முடிகிறது… இழந்தவை என்பது சில கற்களால் ஆன வீடுகள் மட்டுமேயென்றால் மண் துகள்களால் ஆன நிலங்கள் மட்டுமேயென்றால் கழற்றி வீசியெறியும் உடமைகள் மட்டுமேயென்றால் சொர்ப கனவுகளையும் அர்ப சடலங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டு திசை...

சரஸ் பினாங்கு கவிதைகள்

ரணம் மனதின் கணங்கள் ஆராயப்பட வேண்டாம் அங்கே இருப்பது ஆழமான சேதமும் வலிகளுமே நட்பு நான் சந்தித்தவர்களில் பிரியாமல் இருப்பவள் நீ மட்டும்தான் நான் பிரிந்தவர்களில் சந்திக்காமல் இருப்பவளும் நீ மட்டும்தான் நினைவு மனதோடு இருக்கும் மழைக்காலம் இன்னமும் மீளாத ஒரு வசந்தகாலத்துடன் உள்ளம் எங்கும் இளமை இதயம் முழுவதும் பால்யத்தின் கால்தடங்கள் கை முளைத்து கால் உதைத்து சுவாசமிட்ட நினைவுகள் ஊர்வலம்...